விழுப்புரம் - செஞ்சி சாலையில் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் என்றும் அதனை தொடர்ந்து மூன்றாவது குடைவரைக் கோவில்களாக .பீமநாதீஷ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், நெகனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது..
கோயில் அமைப்பு
இக்கோயிலில் பீம நாதீஸ்வரர், திரிபுரசுந்தரி சன்னதிகள் உள்ளன. ஒரே நாள் இரவில் இக்கோயிலைக் கட்டிஉள்ளனர்
கோவில் கல்வெட்டு :
விக்கிரமச்சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் கற்றளியாக அமைந்தது. விக்கிரமச் சோழன் காலத்து கல்வெட்டில் இறைவன் பூமிசுரமுடையானார் என்று குறிப்பிடப்படுகிறார்
இந்த கோவில் கல்வெட்டில் பூமிசுரமுடை
யா[னார்] சுப்பிர
மணியன் சதா
சேவை குறிப்பிட்டுள்ளது ...
சிவஞானசெம்மல் கண்டராதித்த சோழரின் மனைவியாரும், மதுராந்தக உத்தமசோழரின் தாயாரும், மாமன்னன் ராஜராஜசோழனின் பெரிய பாட்டியுமான செம்பியன் மாதேவியாரின் சிவத்தொண்டு அளப்பரியதாகும். அரச வாழ்க்கையினை துச்சமெனக் கருதி தன் வாழ்நாள் முழுவதையும் புதிய கற்றளிகளாக பழைய தளிகளைப் (கோயில்களைப்) புதுப்பிப்பது, புதிய சிவாலயங்களை எடுப்பது, தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களுக்கெல்லாம் எண்ணிறைந்த செப்புத் திருமேனிகளை வார்த்து அளிப்பது, தங்கத்தாலும், வெள்ளியாலும் தெய்வ உருவங்களை சமைத்து சிவாலயங்களுக்கு அர்ப்பணிப்பது, நவமணிகள் பதிக்கப்பெற்ற பொன்னாலான அணிகலன்களைத் தெய்வப் படிமங்களுக்குச் சூட்டுவது, பொன், வெள்ளி கொண்டு பூசனைக்குரிய கருவிகளையும், வேதிகைகளையும், பாத்திரங்களையும் அளிப்பது என அப்பெருமாட்டி செய்த அறக்கொடைகளை நூற்றுக்கணக்கான சோழர் கல்வெட்டுக்கள்
எடுத்துரைக்கின்றன.
No comments:
Post a Comment