Sunday, May 23, 2021

THIRUNATHAR KUNDRU JAIN HILLS (திருநாதர் குன்று சமண படுகை)

 

 திருநாதர் குன்றுகள், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக் கோட்டைக்கு வடக்கே உள்ளது. இம்மலையை சிறுகடம்பூர் மலையென்றும், இப்பகுதியை சிம்மபுரி என்றும் அழைப்பர். திருநாதர் குகைக் குன்றுகளில் கிபி 4 - 5-ஆம் நூற்றாண்டுகளில் சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலை இரண்டடுக்குச் சிற்பங்களும், முதிர்ந்தநிலை பிராமி எழுத்துமுறையிலிருந்து, வட்டெழுத்தாக தமிழ் எழுத்துகள் வளர்ந்த, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இங்குதான் முதன்முதலில் காணப்படுகிறது.[1] [2]இச்சமணத் தலத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கிறது.

தமிழுக்கு எழுத்தைத் தந்த மலை

மலையின் சிறப்பாக, ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து, திருநாதர்குன்று கல்வெட்டில்தான் முதலில் காணப்பட்டது..இதனால் இம்மலை தமிழுக்கு எழுத்து தந்த மலை எனும் சிறப்பு பெற்றது. . இங்குள்ள ஒரு கல்வெட்டு,சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்கிறது. மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறது. சமீபத்தில் காணப்பட்ட கல்வெட்டு கோயிலில் விளக்கேற்ற நானூறு ஆடுகள் தானம் தரப்பட்டதாகத் தெரிவிக்கிறது.

NEGANUR PUDUR

NEGANUR PUDUR



No comments:

Post a Comment

NEGANUR PUDUR KRISHNARAJ

  “வாழ்க்கையில் பொருட்களை சேமிக்காதீர்கள்… நினைவுகளை சேமியுங்கள்.. பயணங்களால் மட்டுமே இவை சாத்தியம் ஆகும்” வாழ்க்கையில் எல்லோருக்குமே பயணம் ...