கற்பதுக்கை -Cist
கற்பதுக்கை ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம் ஆகும். கற்பதுக்கை தென்னிந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ அல்லது அவரது எலும்புகளைத் புதைத்த இடத்திலோ பெரிய கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் பெருங்கல் சின்னங்கள் என்று கூறுகிறார்கள் இவை அமைக்கப்படும் முறையைய் வைத்து
- கற்க்குவை
- கடற்படை வட்டம்
- கற்பதுக்கை
- கல்திட்டை
- குத்துக்கள்
தொல்பொருட்கள்
இறந்தவர்களின் உடல்பகுதிகள் (எலும்புகள், பற்கள்), அவர்களுக்காக வைக்கப்பட்ட பானைகள், இரும்புப் பொருட்கள் (கத்தி, வாள், ஈட்டி முனை போன்றவை), கல் மணிகள், வெண்கலப்பொருட்கள், சில நேரங்களில், நெல் போன்ற தானியங்களும் இவற்றின் உள்ளே பானைகளில் காணப்படும்..
சங்ககாலப் பதுக்கைகள்
சங்கத்தமிழ் ஆக்கங்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு போன்றவற்றில் அக்காலத்துப் பதுக்கைகள் குறித்த குறிப்புக்கள் உள்ளன. அக்காலத்தில் பாலை நிலத்தின் வழியே செல்லும் வழிப்போக்கர்களைக் கொன்று பொருள் பறிக்கும் மறவர்கள், அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களின் மீது தழைகளைப் போட்டு மூடிக் கற்களையும் குவித்து மேடு செய்து வைப்பர்.பாலை நிலத்தினூடு செல்லும் பாதைகளின் மருங்கில் காணப்படும் இவ்வாறான பதுக்கைகளின் அச்சம் ஊட்டும் வருணனைகளைச் சங்கப் பாடல்கள் தருகின்றன. நரிகள் போன்ற காட்டு விலங்குகள் சிதைக்காமல் இருப்பதற்காகவும், பிணங்கள் எழுந்துவரக்கூடும் என்ற நம்பிக்கையினால், அவ்வாறு நடப்பதைத் தவிர்ப்பதற்குமாகவே தொடக்க காலங்களில் பிணங்களையோ, அவை புதைக்கப்பட்ட இடங்களையோ கற்கள் போட்டு மூடினர் என்கின்றனர்
சங்ககாலத்து நினைவுக் கற்கள் பற்றி ஆராய்ந்த கிருஷ்ணமூர்த்தி, அக்காலத்தில் நினைவுக் கற்களின் வளர்ச்சியினை 4 கட்டங்களாகப் பார்க்கலாம் என்கிறார். இவற்றில் முதற்கட்டம் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும், இரண்டாம் கட்டம் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி முதலாம் நூற்றாண்டு வரை என்றும், மூன்றாம் கட்டம் கிபி முதல் நூற்றாண்டிலிருந்து கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை என்றும் இதற்குப் பிந்திய காலத்தை நான்காம் கட்டமாகவும் அவர் பிரித்துள்ளார் இக்கால கட்டங்களினூடாகப் பல்வேறு வகையான நினைவுச் சின்னங்களுடன் கற்பதுக்கைகளும் வளர்ச்சியடைந்து வந்தன. காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகப் பிணங்களைக் கற்களால் மூடிய ஒரு நிலையில் இருந்து, சடங்குகளோடு கூடிய நினைவுச் சின்ன அமைப்புமுறை வளர்ச்சியடைந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. நடுகல் எடுப்பது குறித்து, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்னும் ஆறு நிலைகள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றன. இங்கே நடுகல் என்பது தற்காலத்தில் நடுகல் என்று புரிந்து கொள்ளப்படுவதை விட, கற்பதுக்கையை உள்ளடக்கிய பிற நினைவுக் கற்களுக்கே பொருந்தும் எனப்படுகிறது.
தென்னிந்தியக் கற்பதுக்கைகள்
தென்னிந்தியாவில் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பல கற்பதுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இடுதுளைகளுடன் கூடிய கற்பதுக்கைகள், கற்குவையுடன் கூடிய கற்பதுக்கைகள் எனப் பல்வேறு வகைகளில் இவ்வாறான கற்பதுக்கைகள் உள்ளன.
கற்பதுக்கைகள் வடிவமைப்புக்கு ஏற்பச் செதுக்கிய கற்களினால் அமைக்கப்பட்டவை. இதனால், கருங்கல்லைப் பயன்படுத்தாமல், செதுக்குவதற்கு இலகுவான செம்புரைக்கல்லைப் பயன்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது. இவ்வகைக் கற்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் இவ்வகையான கற்பதுக்கைகள் கூடுதலாகக் காணப்படுவதாகத் தெரிகிறது. இவ்வாறான கற்பலகைகளைச் சுவசுத்திக்க வடிவில் அமையும்படி நிறுத்திச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு கற்கள் உட்புறமாகச் சரிந்து விழுந்துவிடாமல் இருக்க உதவுகிறது. இது மேலே ஒரு பலகைக் கல்லை வைத்து மூடப்படுகிறது
- ~நடுகல் நாட்டுப்புற முறையாகவும் #பள்ளிப்படைகோயில் அரசுபாணியாகவும் கருதப்பட்டது.
- ~இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களில் மிகப் பழமையானது #புலிமான்கோம்பை நடுகல்
- ~முக்கோண வடிவத்தில் ஐந்து வரிகளில் #தமிழி எழுத்து வடிவத்தை கொண்டுள்ளது #பொற்பனைக்கோட்டை நடுகல்.
- ~பல்லவர் காலத்தின் மிகப் பழமையான நடுகல் என அறிஞரால் அறியப்படுவது #இருளப்பட்டி (பாப்பம்பாடி) நடுகல்.
- ~யானையுடன் நடக்கும் போரில் வீரமரணம் அடையும் வீரனுக்கு எடுக்கப்படும் நடுகல் #யானைகுத்திப்பட்டான் நடுகல்
- ~யானை மற்றும் வீரன் இடையில் நடக்கும் போரில் யார் மரணித்தாலும் நடப்படும் *யானைகுத்திப்பட்டான் நடுகல்.ஓசூர் தேர்பேட்டையில் உள்ளது.
- ~புலியுடன் நடக்கும் சண்டையில் வீரமரணம் அடையும் வீரனுக்கு எடுக்கப்படும் நடுகல் #புலிக்குத்தி நடுகல்#உசிலம்பட்டி மேற்குத்தொடர்ச்சி மலையில்
- 8 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய #புலிக்குத்தி நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- ~கைகளில் வாளும் கேடயமும் அருகே மாடும் இருந்தால் #ஆநிரை_கவர்தல் நடுகல். ஆநிரை மீண்டலில் #வனவிலங்குகளுடன் சண்டையிட்டு உயிர் நீத்த வீரனின் நடுகல்.
- தென்னிந்தியாவின் பல இடங்களில் பல விவங்குகளுடன் போரிடும் நடுகற்கள் காணப்படுகிறது.
- வடதமிழகத்தில் அதிகம் காணப்படுகிறது.
- ~தமிழகத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 4 #தூங்குதலை / தூக்கு தலை நடுகற்களில் #பள்ளூர் நடுகல், கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் #குடிசெட்லு நடுகல்லும் ஒன்று.
- ~நடுகல் போன்று முன்னோர் வழிப்பாட்டில் #மாசி மாத அமாவாசை #மயானக்கொள்ளை திருவிழா.
- ~சோழர் மற்றும் விஜயநகர காலத்து தூங்குதலை, வீர மறவன், சதிகல் என மூன்று நடுகற்கள் #விண்ணமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- ~வேலூர் மாவட்டம், #அம்பலூரில் கி. பி. 9 ஆம் நூற்றாண்டு நடுகல் பன்றியுடன் போரிட்டு இறந்த #நாய்களுக்காக நடப்பட்டுள்ளது..
- ~அரவக்குறிச்சி , கரடிப்பட்டியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த #குதிரைகுத்திப்பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- நடுகல் வழிபடும் பண்பாட்டில் #இசை பெற்றிருந்த முக்கியத்துவத்தை காட்சிப்படுத்துகின்றது #நீலகிரி நடுகல்,பெண்ணேஸ்வரமணம் நடுகல்.
- ~தூங்கு தலை வீரனின் ஆத்மா சிவலோகம் அடையும் காட்சியை விளக்கும் #தெள்ளார் நடுகல்.
- ~அடுக்கு #நெடுநிலை நினைவு நடுகல் - குடிமங்கலம், திருப்பூர்.
- ~களப்பிரர் காலத்து வட்டெழுத்துக்களை கொண்டுள்ளது #எடுத்தவாய்நத்தம் நடுகல்.
- ~தமிழகத்தில் #சிலம்ப வீரனுக்காக கிடைத்த நடுகற்கள் இடம் :தாமல்& தேவரகுந்தானி(கிருஷ்ணகிரி மாவட்டம்)
- ~போர் களத்தில் எதிரிகளை எதிர்த்து நிற்பதைப் போன்று காட்சியளிக்கின்றது #அனுமந்தண்டலம் நடுகல்.
- இடம் : உத்திரமேரூர்
- ~நடுகல் சுற்றி வட்ட வடிவில் கல் அடுக்கி அதனை "#வல்லாண்பதுக்கைக் கடவுள்" என்று அழைத்தனர்.
- ~மழையில் கரைந்தும் வெயிலில் காய்ந்தும் போரில் இறந்த வீரனின் நினைவாக வைக்கப்பட்டம் பாவை, #வினையழி பாவை.
- ~நடுகல் வழிப்பாட்டிற்கு முந்தையது #குத்துக்கல்.
- ~நடுகல்லின் அமைப்பு மற்றும் வழிபாடு முறைகள் பற்றி #தொல்காப்பியம்" தெளிவாக எடுத்துரைக்கிறது.
- ||காட்சி கால் கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணர!!
- ~பெரும்பாலான நடுகல் கல்வெட்டுகள் #வட்டெழுத்துகளாகவே உள்ளன.
- ~கழுமரம் ஏறிய அரசனின் நடுகல்லும் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- ~போர் செய்து வீரமரணம் அடைந்த பெண்களுக்கானது தேன்கனிக்கோட்டை #சந்தனப்பள்ளி நடுகல் .
No comments:
Post a Comment