Sunday, May 14, 2023

Vellore Fort (வேலூர்க் கோட்டை)

 வேலூர்க் கோட்டை (Vellore Fort) 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தில் இக்கோட்டை அமைந்துள்ளது.

அமைப்பு

கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக்கோட்டை இதன் பாரிய மதில்கள்அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஒரு இந்துக் கோயில்கிறித்தவ தேவாலயம்பள்ளிவாசல் ஆகியவை உள்ளன.

சிறப்பு

இந்தியாவில் அகழியோடு கூடிய ஒரே கோட்டை என்ற பெயரைப் பெற்ற இக்கோட்டையின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் உள்ளது



மேலும் வேலூர் அரசு அருங்காட்சியகம் '1999' ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாளில் இருந்து வேலூர் கோட்டைக்குள் இயங்கி வருகிறது.
NEGANUR PUDUR

உருவாக்கம்[தொகு]

விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான, இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்முன நாயக்கரால் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.


NEGANUR PUDUR

வரலாறு

நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக்கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை பிரித்தானியர்களிடமே இருந்தது. பிரித்தானியர் காலத்தில் இக்கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர் , திப்புவின் குடும்பத்தினர் 1806 கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர்,இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான். பிரித்தானியருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி இக் கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. விஜயநகரத்துப் பேரரசன் ஸ்ரீரங்க ராயனின்[2] குடும்பத்தினர் கொல்லப்பட்டது இந்தக் கோட்டையிலேயே ஆகும்

NEGANUR PUDUR

NEGANUR PUDUR





NEGANUR PUDUR

NEGANUR PUDUR

NEGANUR PUDUR

NEGANUR PUDUR


NEGANUR PUDUR

NEGANUR PUDUR

NEGANUR PUDUR

NEGANUR PUDUR



No comments:

Post a Comment

NEGANUR PUDUR KRISHNARAJ

  “வாழ்க்கையில் பொருட்களை சேமிக்காதீர்கள்… நினைவுகளை சேமியுங்கள்.. பயணங்களால் மட்டுமே இவை சாத்தியம் ஆகும்” வாழ்க்கையில் எல்லோருக்குமே பயணம் ...