வெயில் காலம் வந்துவிட்டாலே நுங்கு வரத்து அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கும். மக்களும் வெயில் சூட்டை தனிக்க, தாகத்தைத் தனிக்க நுங்கு உண்பார்கள். அதற்காக மட்டுமல்லாமல் அது உடலுக்கு இன்னும் பல நன்மைகளைக் கொடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
1. நுங்கை ஐஸ் ஆப்பிள் என செல்லமாகவும் அழைக்கிறார்கள். நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.
2. இது வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
3. பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.
4. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.
No comments:
Post a Comment