Monday, June 26, 2023

NEGANUR PUDUR KRISHNARAJ

 


“வாழ்க்கையில் பொருட்களை சேமிக்காதீர்கள்… நினைவுகளை சேமியுங்கள்.. பயணங்களால் மட்டுமே இவை சாத்தியம் ஆகும்”

வாழ்க்கையில் எல்லோருக்குமே பயணம் மேற்கொள்வது பிடித்தமான ஒன்று தான். ஆனால் நம்முடைய பெரும்பாலான பயணங்கள் கோவில், பார்க், விலங்குகள் சரணாலயம், போன்றவற்றை ஓட்டியே தான் அமைந்திருக்கும். மலைவசஸ்தளங்களுக்கு சென்றாலும் ஒரு விடுதிக்குள் தங்கி காலை முதல் மாலை வரை ஊர் சுற்றி விட்டு ஷாப்பிங் முடித்து தூங்குவதை தான் வழக்கமாகவே வைத்திருப்போம். இது தான் பயணம் என்கிற எண்ணத்தை மாற்றி இயற்கையை அதன் போக்கிலே போய் ரசித்தால் எப்படி இருக்கும் ?

NEGANUR PUDUR KRISHNARAJ

பரந்து விரிந்த மலைத்தொடர்கள், எங்கு நோக்கினாலும் பச்சை பசேலென்று தேயிலை தோட்டங்கள், முகத்தை தழுவிச்செல்லும் ஜில்லென்ற காற்று, காலுக்கு கீழே சரிந்த பள்ளத்தாக்கு, கையில் சூடான தேனீர், தங்குவதற்கு சிறிய டெண்ட், பகல் மற்றும் இரவு பொழுது வாய்த்தால் எப்படி இருக்கும்?


Neganur pudur krishnaraj


எனினும் இதற்கு இடையில்தான் மற்றவர்களுக்கு புதியதாக ஏதாவது சொல்ல வேண்டுமென முயற்சிக்கும் சில சுயாதீனப் படைப்புகளையும் காண முடிகிறது.

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj

Neganur pudur krishnaraj



Saturday, June 24, 2023

நெகனூர்பட்டி- தமிழ் பிராமி ( Neganur patti ).

 நெகனூர்பட்டி- தமிழ் பிராமி ( Neganur patti ).


நெகனூர்பட்டி (Neganur Patti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம்வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில்நெகனூர் ஊராட்சியில் நெகனூர்பட்டி எனும் கிராமத்தில் ஒரு சகிமீ பரப்பில் அமைந்த சமணப் பண்பாட்டுத் தொல்லியல் தலமாகும். நெகனூர்பட்டி சமணப் பண்பாட்டுத் தலம் செஞ்சி நகரத்திற்கு வடகிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ளது.

சிறுகுன்றுகள் சூழ்ந்த நெகனூர்பட்டியை அடுக்கங்கள் என்பர். இக்குன்றுகள் சிறுகுகைகள் கொண்டது. இக்குகைகளில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள்தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் சமணர் படுகைகள் கொண்டுள்ளது.



Neganur patti krishnaraj

பெரிய பாறையின் கீழ் வரலாற்றுக்கு    முந்தைய ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியம், கைகளில் எதையாவது வைத்திருப்பது, விளையாடுவது போன்ற பல்வேறு செயல்களைக் கொண்ட மனிதர்களைக் கொண்டுள்ளது. ஓவியங்கள் வெள்ளை காவியால் வரையப்பட்டுள்ளன. இது 5000 - 6000 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.



Neganur patti krishnaraj

  1. பெரும்பொகழ்
  2. செக்கந்தி தயிரு
  3. சேக்கந்தண்ணிசெ
  4. ய்வித்த பள்ளி
என்பது கல்வெட்டு வாசகமாகும். பெரும்பொகழ் என்ற ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவரின் தாயான சேக்கந்தண்ணி என்பவர் இந்த பள்ளியைச் செய்வித்தார் என்பது இதன் பொருளாகும். முதல்வரி கடைசி எழுத்து ”ழ்”. க. இராசவேலுவால் “ய்” என்று படிக்கப்பட்டது. இரண்டாம் வரி கடைசி எழுத்து ”ரு”,  எம்.டி சம்பத்தால் “உ” என்று படிக்கப்பட்டது.

krishnaraj neganur patti


கல்வெட்டுச் செய்தி
கல்வெட்டில் சேக்கந்தண்ணி என்பதை சேக்கந் அண்ணி என்று பிரித்துப் படிக்க வேண்டும். இவரைச் சமணப் பெண் துறவியாகக் கொள்ளலாம். சேக்கிழார் என்பதில் “சே” குடிப் பெயராக இருப்பது போல இங்கும் குடிப்பெயர் எனக்கருதலாம். “சே” என்பது காளை என்ற பொருளில் அகப்பாடலில் ( அகம் 36 “கயிறு இடு கதச் சேப்போல” ) குறிக்கப்படுகின்றது. கந்தி என்ற சொல் சீவக சிந்தாமணியில்  ( 26:49 கறந்த பால்  அணைய கந்தி ) பெண் துறவி என்ற பொருளில்  கையாளப்பட்டுள்ளது. சூடாமணி கந்தி கௌந்தி  என்ற சொற்களுக்கும் பெண்துறவி என்று பொருள் சொல்கிறது. தாயிரு என்பது தற்கால கன்னட மொழியில் தாயாருக்கு வழக்கு சொல்லாக  உள்ளது. அண்ணி என்பது மரியாதைச் சொல்லாக பயன்பட்டுள்ளது. பெரும்புகை என்றொரு ஊர் அருகில் உள்ளது. அங்குள்ள குன்றிலும்  கற்படுகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில்  சொல்லப்படும் பெரும்பொகழ் இன்றைய “பெரும்புகை” யாக இருக்கலாம்.




neganur krishnaraj






இந்தியா முழுவதும் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக் களில் பெரும்பாலும் பிராகிருத மொழி இடம் பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் தமிழ் மொழி மட்டுமே இடம் பெறுகிறது. சில பிராகிருத வரிவடிவங்கள் (ஸ, த4) மற்றும் ஒரு சில பிராகிருத சொற்கள் (த4 ம்மம் ஸாலகன்) மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. எனவே எழுத்து ஒற்றுமையிருப்பினும் மொழி மற்றும் சில சிறப்புத் தன்மைகள் காரணமாக சங்க காலத்தில் கிடைக்கும் பழந்தமிழ் எழுத்துக்களை இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்திலிருந்தும் அசோக பிராமி எழுத்திலிருந்தும் வேறுபடுத்தும் முகமாக வழங்கப்பெற்ற பெயரே “தமிழி” அல்லது “தமிழ் பிராமி” என்பதாகும்.

தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்திற்கு “தமிழ் பிராமி” என்று பெயரிட்டவர் ஐராவதம் மகாதேவனாவார். அதுபோல் “தமிழி” என்று பெயரிட்டவர் நாகசாமியாவார். இதனை “தொன்மைத் தமிழ் எழுத்துக்கள்” என நடன காசிநாதன் மற்றும் சு.இராசவேல் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.






இவ்வெழுத்துக்களின் தன்மை (Nature of Inscriptions)

பழந்தமிழ் எழுத்துகள் சமணர்கள் வாழ்ந்த குகைகளிலேயே பெரும்பாலும் காணக் கிடைகின்றன.

பொது ஆண்டிற்கு முன் (கி.மு.விற்கு பதிலாக பொ.ஆ.மு -பொது ஆண்டிற்கு முன் என்பது வழங்கப்படுகிறது.)
பொ.ஆ.பி. (கி.பி.க்கு பதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது).

சமண குகைகளில் காணப்பட்டாலும் சமண சமயத்தைப் பற்றியோ அதன் கொள்கைகள் பற்றியோ குறிப்பிடவில்லை.

இவர்களுக்கு அமைத்துக் கொடுத்த இருக்கையும் அதனை அமைத்துக் கொடுத்தவர் பெயர் மற்றும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் குறித்தே கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
அனைத்தும் தமிழ் மொழியிலேயே உள்ளன. ஸ, த3 போன்ற ஒரு சில பிராகிருத சொற்கள் இடம் பெறுகின்றன.

பாறைகளில் மட்டுமின்றி நடுகற்கள், மட்பாண்டங்கள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பெற்றுள்ளன.பாறைகளில் மட்டுமின்றி நடுகற்கள், மட்பாண்டங்கள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப் பெற்றுள்ளன.

புலிமான் கோம்பை, தாதப்பட்டி, திண்டுக்கல், (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், பொற் பனைக் கோட்டை (புதுவை)) ஆகிய மூன்று இடங்களில் கிடைத்த 5 கல்வெட்டுகள் மட்டுமே நடுகற்களாக வுள்ளன. இவையே இதுவரை கிடைத்த தமிழி கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டதாக உள்ளன.
இதுவரை 32 இடங்களிலிருந்து 95 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன


பீம நாதீஷ்வரர் கோயில் (NEGANUR)

 விழுப்புரம் - செஞ்சி சாலையில் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் என்றும்  அதனை தொடர்ந்து மூன்றாவது  குடைவரைக் கோவில்களாக  .பீமநாதீஷ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம்,  நெகனூர் என்னும் ஊரில்  அமைந்துள்ள சிவன் கோயிலா ஆய்வாளர்களால் கருதப்படுகிறது..



கோயில் அமைப்பு

இக்கோயிலில்   பீம நாதீஸ்வரர், திரிபுரசுந்தரி சன்னதிகள் உள்ளன. ஒரே நாள் இரவில் இக்கோயிலைக் கட்டிஉள்ளனர் 




NEGANUR krishnaraj

NEGANUR krishnaraj




கோவில் கல்வெட்டு :

விக்கிரமச்சோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் கற்றளியாக அமைந்தது. விக்கிரமச் சோழன் காலத்து கல்வெட்டில் இறைவன்  பூமிசுரமுடையானார் என்று குறிப்பிடப்படுகிறார்

neganur krishnaraj

இந்த கோவில் கல்வெட்டில் பூமிசுரமுடை
யா[னார்] சுப்பிர
மணியன் சதா
சேவை  குறிப்பிட்டுள்ளது ...

சிவஞானசெம்மல் கண்டராதித்த சோழரின் மனைவியாரும், மதுராந்தக உத்தமசோழரின் தாயாரும், மாமன்னன் ராஜராஜசோழனின் பெரிய பாட்டியுமான செம்பியன் மாதேவியாரின் சிவத்தொண்டு அளப்பரியதாகும். அரச வாழ்க்கையினை துச்சமெனக் கருதி தன் வாழ்நாள் முழுவதையும் புதிய கற்றளிகளாக பழைய தளிகளைப் (கோயில்களைப்) புதுப்பிப்பது, புதிய சிவாலயங்களை எடுப்பது, தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களுக்கெல்லாம் எண்ணிறைந்த செப்புத் திருமேனிகளை வார்த்து அளிப்பது, தங்கத்தாலும், வெள்ளியாலும் தெய்வ உருவங்களை சமைத்து சிவாலயங்களுக்கு அர்ப்பணிப்பது, நவமணிகள் பதிக்கப்பெற்ற பொன்னாலான அணிகலன்களைத் தெய்வப் படிமங்களுக்குச் சூட்டுவது, பொன், வெள்ளி கொண்டு பூசனைக்குரிய கருவிகளையும், வேதிகைகளையும், பாத்திரங்களையும் அளிப்பது என அப்பெருமாட்டி செய்த அறக்கொடைகளை நூற்றுக்கணக்கான சோழர் கல்வெட்டுக்கள்
எடுத்துரைக்கின்றன.






NEGANUR krishnaraj

NEGANUR krishnaraj

NEGANUR krishnaraj

NEGANUR krishnaraj

NEGANUR krishnaraj

NEGANUR krishnaraj

NEGANUR krishnaraj


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள்

 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள்

----------------------------------------------------------------
ஈரோடு நகரிலிருந்து இந்தக் கோயில் ஏறக்குறைய 18 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 1250 படிக்கட்டுக்கள் கொண்ட இம்மலையின் உச்சியில் இருப்பது செங்கோட்டு முருகன் ஆலயமும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலும் ஆகும். மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது.திருச்செங்கோட்டு ஆலயம் ஒரு தெய்வத்தை மட்டும் சிறப்பிக்கும் நிலையில்லாது சிவஸ்தலம், செங்கோட்டு முருகனின் தலம், நாகதேவர் ஸ்தலம் என மூன்று வகையில் இக்கோயில் மக்களால் அறியப்படுகின்றது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர ஆலயம் என்பது மட்டுமல்லாது இப்புண்ணியத் ஸ்தலத்திற்கு மேலும் பல பெயர்கள் அமைந்திருக்கின்றன.

கொடிமாடச் செங்குன்றம் / கொடிமாடச் செங்குன்றூர்
  • தெய்வத்திருமலை
  • நாககிரி
  • அரவாகிரி
  • உரகவெற்பு
  • கட்செவிக் குன்றூர்
  • பணிமலை
  • தந்தகிரி
  • நகபூதரம்
  • புசகபூதரம்
  • நாகாசலம்
  • நாகமலை
  • முருகாசலம்
  • தாருகாசலம்
  • திருவேரகம்

என்ற பெயர்களும் வழங்கப்பெற்றுள்ளன என்று திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல் கூறுகின்றது.

நாகதேவருக்கு இங்கு ப்ரத்தியேகமான சன்னிதானம் அமைந்திருப்பதால் நாகத்தின் பெயரை உள்ளடக்கிய வகையில் நாககிரி, அரவகிரி, உரகவெற்பு போன்ற பெயர்களும் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று.

இக்கோயில் அமைந்திருக்கும் மலை

  • கோதமலை
  • முத்தலை
  • கடகமலை
  • துர்க்கைமலை
  • முத்திமலை
  • வாயுமலை
  • பொறுதுமலை
  • வந்திமலை
  • அழகுமலை
  • தாருமலை
  • சூதமலை
  • தவமலை
  • அனந்தன்மலை
  • தங்கமலை
  • யோமலை
  • மேருமலை
  • கொங்குமலை
  • கத்தகிரி
  • ஞானகிரி
  • இரத்தகிரி
  • கோணகிரி
  • பிரம்மகிரி
  • தீர்த்தகிரி
  • தர்மகிரி
  • கந்தகிரி
  • பதுமகிரி
  • தேதுகிரி

என்று தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றது என்று திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல் கூறுகின்றது.






திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள்



உயர்ந்து செல்லும் மலையின் பாதையின் இடப்புறமாக உள்ள பெரும் பாறையில் எளிதாக பாம்பொன்று ஐந்து தலையுடன் செதுக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் சின்னஞ்சிறிய வடிவில் பாம்புகள் உள்ளன பெரிய நாகம் ஆதிசேடனின் அங்கம் என்பர். கங்கை யமுனை சரஸ்வதி என்று கல்வெட்டுகளில் உணர்த்தப்படும் மூன்று சிறிய சுனைகள் உள்ளன.

பிற்காலச் சோழர் சோழர்களும் பாண்டியர்களும் கோயிலுக்கும் கோயில் காரியம் பார்க்கும் அந்த இருக்கும் நிபந்தங்களும் உரிமைகளும் பலவாறு செய்யப்பட்டது பற்றி கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

கல்வெட்டுகளில் குறிக்கப் பெறும் அரசர்கள் காலத்தில் எழுந்த கல் எழுத்துக்களின் அமைப்பில் வடிவ மாறுபாடுகள் மல்கி இருப்பதால் பழைய கல்வெட்டுகளின் செய்தி முறைமைக்கு மாறாக உரிமை ஒன்றையே குறிப்பாக கொண்டிருப்பதாலும் பிற்கால முயற்சியின் காரணமாக தோன்றிய கல்வெட்டுகள் என்று இவற்றைக் கருதவேண்டியுள்ளது என்று கல்வெட்டு அறிஞர் கோவிந்தராசனார் கூறுகிறார்.

வட்ட எழுத்துக்களில் ஐந்து வரி உள்ள கல்வெட்டு ரிஷப மண்டபத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

திருச்செங்கோடு வட்டத்தில் - 81 கல்வெட்டுக்கள் இது வரை படி எடுக்கப்பட்டுள்ளன.

மலைப்படிக்கட்டுகளின் ஓரத்தில் உள்ள மலையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கோவிலுக்குப் பங்களித்த மன்னர்கள் மற்றும் தனிநபர்கள் சோழ மன்னர் 1ஆம் ராஜேந்திரன் (கி.பி. 1032), சோழ மன்னர் இராஜகேசரி வர்மன் (10ஆம் நூற்றாண்டு), சோழ மன்னர் (கொங்கு - 13ஆம் நூற்றாண்டு), சோழ மன்னர் 3ஆம் ராஜேந்திரன் (கொங்கு சோழராக இருக்கலாம்)( 13ஆம் நூற்றாண்டு. ), பாண்டிய மன்னன் 2ஆம் சடையவர்ம சுந்தரன் (13ஆம் நூற்றாண்டு), கொங்கு சோழன் வீர ராஜேந்திரன் (13ஆம் நூற்றாண்டு), விஜயநகர் (16ஆம் நூற்றாண்டு), வீரபிரதாப கிருஷ்ணராய மகாராயர், கிருஷ்ணதேவ மகாராயர், சதாசிவ மஹாராயர், நல்லதம்பி காங்கேயன், ஆத்தப்ப நல்லதம்பி காங்கேயன் (13ஆம் நூற்றாண்டு) நூற்றாண்டு ) குமாரசாமி காங்கேயன் , நாயக்கர் விஸ்வநாத சொக்கலிங்கன் , விஜயநகரம் ( 17 ஆம் நூற்றாண்டு ) நாயக்கர் சொக்கநாதன் , நரசிம்ம உடையார் , நாயக்கர் போத்து 9 18 ஆம் நூற்றாண்டு ). மேற்கண்ட சோழ மன்னன் 3வது ராஜேந்திரன் தான் அதிகபட்ச பங்களிப்புகளை பெற்றுள்ளார். பரிகாரம் என்ற பெயரில் பாம்பு புடைப்புகளை வெட்டி இந்த கல்வெட்டுகள் அழிக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது.

ராஜகேசரி வர்மன், பரகேசரி வர்மன் காலத்துக் கல்வெட்டுக்கள் பிராமண போஜனம் செய்விக்க ஏற்படுத்திய நிபந்தங்களைக் கூறுகின்றன.

அறுபதாம் படிப்பக்கம் மதுரை கொண்ட பரகேசரி வர்மனது வெற்றிகளைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவை அக்காலத்தில் கிராம சபைகள் எப்படி நடந்தன என்பதையெல்லாம் குறிக்கின்றன.

திருச்செங்கோட்டில் சில செப்பு பட்டயங்களும் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கிருஷ்ண தேவராயன், மதுரை திருமலை நாயக்கர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. இவற்றில் சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் அதிகளவில் காணப்படுகிறது. இவைகளின் மூலமாகவே பெரும்பாலான திருமலையில் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் திருக்கோயிலை பற்றிய செய்திகளை நாம் அறிகிறோம். விஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களது பிரதிநிதிகளாக செயல் பட்டவர்கள் மன்னரின் ஆனையை ஏற்று இப்பகுதியில் பெரும்பாலான நற்பணிகளை செய்துள்ளனர். அவர்களில் குறிப்பாக கிபி 16-ம் 17-ம் நூற்றாண்டில் திருச்செங்கோட்டுக்கு அருகே உளள மோரூரில் வசித்த வந்த கண்ணங்கூட்டத்தை சேர்ந்த திப்பராச உடையார், திரியம்பக உடையார் மற்றும் நரசிம்ம உடையார் அவர்களை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. அதே போல் திருமலையில் அத்தப்ப நல்தம்பி காங்கேயன் மற்றும் இவரது மகன்களான அத்தப்ப இம்முடி காங்கேயன், குமாரசாமி காங்கேயன் ஆகியோரின் பெயர்களும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.

கிபி 1509 முதல் 1565 வரை விஜயநகர பேரரசு கிருஷ்ண தேவராயர் ஆட்சிகாலத்தில் அவர் சார்பாக இங்கு ஆட்சி செய்து வந்தவர்களின் தலைமையின் பல திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

கிபி 1550-ல் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த நரசிங்க ராமாஞ்சி என்பவரால் திருமலையில் வடகோபுரமாகிய ராஜகோபுரத்தை செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து மூலம் செயயப்பட்டது. கயிலாயநாதர் கோயில் முன் நிறுவப்பட்டுள்ள 60 அடி கம்பமும் இவர் காலத்தில் தான் நிறுவப்பட்டது.

கிபி 1608-ல் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த மாரிராஜந்திர மகிபன் என்பவரால் ஆதிகேச பெருமாள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இது நடைபெற்று சுமார் 400 ஆண்டுகளாகிறது.

இவரின் காலத்தில் தான் கிபி 1617-ல் கையிலாயநாதர் ஆலயத்தின் முன் கோபுரம் பூர்த்தி செய்யப்பட்டது. இன்றைக்கு சுமார் 390 ஆண்டுகளாகிறது.

கையிலாயநாதர் ஆலயத்தின் கோபுரவேலை முடிந்து சுமார் 62 ஆண்டுகளுக்கு பிறகு கிபி 1679-ல் சங்ககிரி ஆட்சி பீடத்தில் இருந்த தேவராசேந்திர ரகுபதி என்பவரால் கையிலாயநாதர் ஆலயத்தின் வாயிற் நிலைக்கதவு செய்யப்பட்டது.

கிபி 1599ல் மோரூர் கண்ணங்குலம் வேலபூபதி சந்ததி வெற்றி குமாரசாமி என்பவரால் அர்த்தநாரீஸ்வரரின் கிழக்கே உள்ள நந்தி, பலிபீடம் முதலியன நிறுவப்பட்டது.

கிபி 1588-ல் மதுரையை ஆண்ட விசுவநாத சொக்கலிங்க நாயக்கர் ஆட்சியில் திருக்கோயிலுக்கு நில தானம் செயயபபட்டதாக சுப்பரமணி சுவாமி கோவிலுக்கு வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1522-ல் கிருஷ்ணதேவராயர் காலத்தில் சோழமண்டலத்தை சேர்ந்த திரியம்பக உடையார் அர்த்தநாரீஸ்வருக்கு திருவிழா நடத்துவதற்கு நகரின் பல வரிகளை தானமாக கொடுத்ததாக அறியப்படுகிறது.

1619-ல் இம்முடி நல்லதம்பி காங்கேயன் செங்கோட்டுவேலவர் மண்டபத்தையும், அர்த்தநாரீஸ்வரர் மண்டபத்தையும் கட்டினார்.

கோவை மாவட்டம் காடாம்பாடி எனும் ஊரில் ஐநூற்றுச் செட்டியார் எனும் இனத்தில் பிறந்த பக்தர் பாததூளி- சுந்தரியம்மாள் தம்பதியினருக்கு மகப்பேறு வாய்க்காமல் போக, அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் எறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தானதருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றினைந்து திருச்செங்கோடு மலைமீது இராஜகோபுரம் அமைத்து தந்துள்ளனர் என இங்குள்ள தற்காலக் கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது.

மலை மீது அமைந்துள்ள இக்கோயில் பண்டைய காலத்தில் நாக வழிபாட்டினையும், வேட்டுவர்கள் தங்களின் குலதெய்வமான பெண் தெய்வத்தை வணங்கிய இடமாகவும் திகழ்ந்துள்ளது.

திருச்செங்கோடு ஆனங்கூர் ரோட்டில், கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் குளம் வெட்டபட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. 400 ஆண்டு பழமையும், வரலாற்று பெருமையும் கொண்ட தெப்பகுளத்தில், 30 அடி ஆழத்தில் ஐந்து நீருற்று கிணறுகளும் உள்ளன. இங்கு தான் அர்த்தநாரீஸ்வரர் தெப்ப உற்சவம் நடைபெறும். நீருற்று கிணற்றின் பக்க சுவற்றில் கிருஷ்ணதேவராயர் ஆட்சி கால கல்வெட்டு இன்றும் அழியாமல் உள்ளது.

இங்குள்ள கற்சிலைகளும், சிற்ப்பங்களும், பெரும்பாலும் சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது.

மலையின் மீது அமைந்துள்ள பாழடைந்த கோவிலின் வடமேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் நாமக்கல் பகுதி ‘திருவரைக்கல்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மலைமேலே அக்காலத்திலே கோட்டை ஒன்று இருந்தது என்பதற்குக்கூடச் சான்றுகள் கல்வெட்டில் கிடைக்கின்றன. இன்று அக்கோட்டையின் சின்னம் முழுவதும் அழிந்து போயிருக்கிறது. கோட்டை போய்விட்டது. கோட்டை வாசல் என்ற பெயர் மட்டும் இருக்கிறது.

NEGANUR PUDUR KRISHNARAJ

  “வாழ்க்கையில் பொருட்களை சேமிக்காதீர்கள்… நினைவுகளை சேமியுங்கள்.. பயணங்களால் மட்டுமே இவை சாத்தியம் ஆகும்” வாழ்க்கையில் எல்லோருக்குமே பயணம் ...