Sunday, May 23, 2021

NEGANUR PUDUR ( Kanava Cave )

நெகனூர் ( மதுரா புதூர்) புதூரில்  அமைந்துள்ள சின்ன மலை என்கின்ற மலையின் அடிவாரத்தில் குகை ஒன்று  அமைந்துள்ளது
இந்த குகையில் ஆபத்து ம் அமானுசியங்கள் நிறைந்துள்ளதாக கிராமவாசிகள் கருதுகின்றனர். 

NEGANUR PUDUR


மேலும் இக்குகையைப் பற்றி கேட்கும்பொழுது இங்கு காலம்காலமாக வாழ்ந்து வந்த கிராமவாசிகளின் முன்னோர்கள் கூறியது.இக்கிராமத்திற்கு அருமையில் அமைந்துள்ள செஞ்சி கோட்டையின் ஆரம்ப காலத்தில்  கோட்டையினை அமைப்பதர்க்காக நிலப்பரப்புகளையும் மலைப்பகுதியையும் தேர்ந்தெடுத்தனர் அவப்பொழுது அறியப்பட்ட மலை இன்றைய  திருவத்தியூர் மலை .



 

NEGANUR PUDUR







(பென்னகர்.சோழகுணம்)  இவை அருகில் அமைந்துள்ள ஊர்கள்  .ஆரம்ப காலத்தில் இம்மலையில் கோட்டையினை உருவாக்கும் தருனத்தில் பல மனித இழப்புகளும்,இயற்கை நிகழ்வுகளும் ,தானியங்களும், தங்களுக்கு பெரிதும் கொள்ளைஅடிக்கப்பட்டன.

            கோட்டை முற்றிலும் முற்றுறா நிலையில் பல பகுதிகளில் மேற்பரப்புகள் உள் வாங்கத் தொடங்கின . ஆரம்ப காலத்தில் இருந்து தவறான நிகழ்வுகளின் தொடர்ச்சியால் கோட்டையினை மேம்படுத்தும் முயற்சியினை கைவிட்டனர்

                                        .பின் அன்மையில் அமைந்துள்ள செஞ்சியினை தேர்ந்தெடுத்து கோட்டையின் ஆரம்ப  பணிகள் சரிவர அங்கு முதலில் மலையின் அடிவாரத்தில் காளி கோவில் ஒன்றை அமைத்து சுமார் 1000 எருமைகளை பலிகொடுத்தனர் பின்பே அமைக்க பட்ட கோட்டையே இன்றைய செஞ்சி கோட்டை ஆனது -

இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.



அப்போது ஆட்சியில் பல கொள்ளை நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறியது 
இதனை தடுப்பதற்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு கண்காணித்து வந்தனர் இருதியில் 7நபர்களை கைது செய்தனர்  அதில் அவர்கள் கொள்ளை அடித்த தங்கங்ளும் தானியங்களும்.நாணயங்களும் இரண்டு பல்வேறு மலைகளில் பதுக்கிவைத்துள்ளதாக கூறினர்.பின் அவற்றில் ஒருமலையான இன்றைய செஞ்சி அன்மையில் ஊரனிதாங்கள் என்ற மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குகையில் கண்டுபிடிக்க ப்பட்டது பின் அதன் வடக்கே உள்ள மதுரா புதூர் இன்றைய நெகனூர் புதூரில் உள்ள மலையில் பின் அறியப்பட்டு சென்றனர்.




 மிக குறுகிய குகையம் உள்ளே பல்வேறு துணை குகையும் அருவி ஒன்று நீரூற்றாக சென்று கலக்கும் குளம் ஒன்றும் பின் சித்திர எழுத்துக்களான தமிழ்  பிராமி -தமிழி எழுத்துக்களும் அறியப்பட்டன. பின் இவற்றை முற்றிலும் நுழையா வண்ணம் குகையினை மூடினர் .


பின் காலப்போக்கில் பல போர்களின் பின்னணியில் தலைமரவானவர்கள் இக்குகையில் வசிக்க ஆரம்பித்தனர் பின் ஆட்சியின் வீழ்ச்சி காரணமாக கோட்டையின் செல்வங்கள் சூரையாடப்பட்டன.பின் அவற்றில் சிறுபகுதியை இக்குகையில் பதுக்கி வைத்தனர்  பின் அவற்றை தங்கள் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தியும் இக்குகையில் வசித்து வந்தனர் 








-பின் கடும் மழைப்பொழிவாலும்  குகையில் நீரூற்று அதிகம் ஆனதாலும்  குகையைவிட்டு  வெளிவர முடியாமல் உள்ளதாகவே இறந்து  போனார்கள்  பின் காலப்போக்கில் நீரூற்று அதிகமாகி வெளியே வரத்தொடங்கின  பின் மக்கள் இவற்றை பருகுவதற்காக  கொண்டு செல்ல ஆரம்பித்தனர் .பின் சில காலங்களில் வறட்சி தொடற நீரூற்று ஆனது உள்ளே செல்ல ஆரம்பித்தது பின் நீரின் தட்டுப்பாட்டினால்  இவற்றை எடுக்க உள்ளே சென்று கொண்டு வந்தனர் பின் நாளடைவில் நீரானது முற்றிலும் உள்ளே சென்று விட்டது. இவற்றை அறிந்து மக்கள் சிலர் நீரானது எங்கு தொடர்கின்றது என அறிய தீப்பந்தத்துடன் சென்றனர். பின் ஒரு குறுப்பிட் பகுதிகளில் குகைகள் பிரிவதாகவும் சில பாறை ஓவியங்கள் இருப்பதையும் கண்டு பயந்தனர்







 பின்மெதுவாக செல்ல பல பல மண்டை ஓடுகளும் பானைகளும் பார்த்து  பயந்து போனர்கள்  பின் பானைகளில் தங்கங்களும் பவள மணிகளும் இருப்பதைக்கண்ட அவர்களின் மனதில் பல அச்சங்களும் குழப்பங்களும் நிறைந்திருந்தது பின் மெதுவா செல்வங்களை எடுக்க பானை அருகில் சென்றவுடன் சில தீப்பந்தங்கள் அனைய ஆரம்பித்தன அச்சத்தில் வெளியேர முற்பட்டனர் சிலர் வழிமாறி சென்றனர் சிலர் பாறை இடுக்குகளில் மாற்றிக்கொண்டனர்



 முற்றிலும் தீப்பந்தங்கள் அழிந்தனர் பின் யாரும் வெளிவரா கட்டத்தில்  இரண்டு நாட்கள் கழித்து மூன்றுபேர் வந்து படுத்த படுக்கையிலே இருந்தனர் அதில்ஒருவர் நடந்ததை கூறினார் பின் அனைவரும் அடுத்த சிறிது நேரத்திலே இறந்து போனார்கள்  அவற்றை அறிந்த  மூதாதையர் ஒருவர்அது சபிக்கப்பட்ட பகுதியாகவும் உள்ளே உள்ள செல்வத்தை பூதங்கள் பாதுகாக்கின்றன என அச்சத்தை  ஏற்படுத்த மக்கள் அனைவரும் போக பயந்தன பின் நாளடைவில் இவை பூதங்கள் நிறைந்த குகையாக மக்களுக்கு காட்சியளித்தன....








2019 வருடத்தில் இவை அனைத்தும் கட்டுக்கதைகள் என அறிந்து உள்ளூர் வாசிகளில் ஒருவர் தனியாகக் உள்ளே சென்றார் பின் சிறிது தூரத்தில் தீப்பந்தம் ஆனது




 அனைய  ஆரம்பித்தனர் பின் பற்ற வைக்க அவையும் அனைந்தது பின் டார்ச் ஒளியினை பயன்படுத்தி செல்ல சிறிய நீரூற்றும் மணலும் பாறை ஓவியங்களும் முன்னோர்கள்  கூறியது உண்மை தான்  என முன்னேறி செல்ல அச்சங்கள் நிறைந்து வெளிவர  பாதை மாறி சுற்றி ஒரு கட்டத்தில் வெளிவர அடுத்த நாளாகிவிடுகிறது பின் அனைவரிடம் நடந்ததை கூறினார் பின் சில விச பூச்சிகள் கடினால் படுத்தபடுக்கையான இவர் ஆறு மாதங்கள் கழித்து இறந்து போக கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது





No comments:

Post a Comment

NEGANUR PUDUR KRISHNARAJ

  “வாழ்க்கையில் பொருட்களை சேமிக்காதீர்கள்… நினைவுகளை சேமியுங்கள்.. பயணங்களால் மட்டுமே இவை சாத்தியம் ஆகும்” வாழ்க்கையில் எல்லோருக்குமே பயணம் ...